» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!

புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)


உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்களின் ரோமம் நீல நிறமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நாய்கள் 1986 செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியை சேர்ந்தவை. இந்த நாய்கள் மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் வனவிலங்குகளுடன் வாழ்கின்றன.

'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' அமைப்பு இங்கு உள்ள சுமார் 700 நாய்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வழக்கமான கருத்தடை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய சென்றபோது போது மூன்று நாய்கள் விசித்திரமாக நீல நிறத்தில் இருப்பதை கண்டறிந்ததாக அவ்வமைப்பின் தெரிவித்தனர்.

அவை இதன்முன் சாதாரணமாகவே இருந்தன என்றும் அப்பகுதியில் உள்ள எதோ ஒரு ரசாயனத்துடன் தொடர்ந்து கொண்டதில் அவற்றின் நிறம் மாறியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். உண்மையான காரணத்தைக் கண்டறிய அவற்றின் ரோமம், தோல் மற்றும் இரத்தத்தின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது. அபாயகரமான கதிரியக்கப் பொருட்கள் காற்று மண்டலத்தில் பரவி, உக்ரைன், பெலாரஸ், ரஷியா மட்டுமின்றி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவியது.இதில் பலர் உயிரிழந்தனர்.

மேலும் கதிரியக்கத்தால் மக்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 30 கி.மீ அணுமின் நிலையத்தை சுற்றளவுள்ள பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory