» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஐரோப்பியப் பயணம் தொடக்கம்: நெதர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு!
சனி 16, மே 2026 12:25:34 PM (IST)

அமீரகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துவிட்டு, தற்போது நெதர்லாந்து சென்றடைந்துள்ளார்.
அமீரகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்துப் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளேன். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நமது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ள நிலையில் இந்த நெதர்லாந்துப் பயணம் அமைந்துள்ளது.
இப் பயணத்தின் போது நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் (Rob Jetten) இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். மேலும், மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரைச் சந்திக்க உள்ளதோடு, அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 6 நாள் பயணத்தில் நெதர்லாந்தைத் தொடர்ந்து சுவீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்குப் பிரதமர் மோடி செல்லத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிச்சயமற்ற சர்வதேச சூழலில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு மிக முக்கியம்: ஜப்பான் பிரதமர் பேட்டி!
புதன் 1, ஜூலை 2026 5:04:56 PM (IST)

சிந்து நதிநீர் உரிமைகளைப் பறிப்பவர்கள் கைகள் வெட்டப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்கள் மிரட்டல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:52:09 AM (IST)

சீஷெல்ஸ் நவசக்தி விநாயகர் கோயிலில் மோடி வழிபாடு: உலக அமைதிக்காகப் பிரார்த்தனை!
திங்கள் 29, ஜூன் 2026 3:45:56 PM (IST)

வெனிசுலாவில் வரலாறு காணாத இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் பலி, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்!
வெள்ளி 26, ஜூன் 2026 8:52:06 AM (IST)

கமேனியின் இறுதிச் சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு!
புதன் 24, ஜூன் 2026 4:29:35 PM (IST)

இந்திய வங்கிக்கு வட்டியுடன் ரூ.100 கோடி செலுத்த நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 11:57:40 AM (IST)


