» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
வெள்ளி 24, பிப்ரவரி 2023 4:26:52 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பயிர் சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று பயிர் சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : நாங்குநேரி வட்டத்தில், உள்ள மஞ்சுவிளை, மேல வடகரை, கீழவடகரை, பத்மநேரி, தேவநல்லூர், பொத்தைசுத்தி, கள்ளிகுளம், மீனவன்குளம், கைலாசப்பேரி, களக்காடு, படலையார்குளம், கருவேலன்குளம், கடம்போடு வாழ்வு, சூரன்குடி மற்றும் தெற்கு நாங்குநேரி போன்ற 15 கிராமங்கள் பயன்பெறும் வகையில், வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி வட்டத்தில் உள்ள, மடத்து அணைக்கட்டு (141.60 ஏக்கர்), ஏட்டு துரைசாமி அணைக்கட்டு முதல் தமிழாகுறிச்சி அணைகட்டு வரை பாசன பரப்பு (445.75 ஏக்கர்), நாங்குநேரியன் கால்வாய் 388.40 ஏக்கர் ஆக மொத்தம் 975.75 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு பயிர் சாகுபடிக்கு 24.02.2023 முதல் 31.03.2023 வரை 36 நாட்களுக்கு 50 க.அடி/விநாடிக்கு, மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரி வட்டத்தில், உள்ள மஞ்சுவிளை, மேல வடகரை, கீழவடகரை, பத்மநேரி, தேவநல்லூர், பொத்தைசுத்தி, கள்ளிகுளம், மீனவன்குளம், கைலாசப்பேரி, களக்காடு, படலையார்குளம், கருவேலன்குளம், கடம்போடு வாழ்வு, சூரன்குடி மற்றும் தெற்கு நாங்குநேரி ஆகிய கிராமங்கள் பயன்பெறும். விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்னமாக பயன்படுத்தவும், நீர் விநியோக பணியில் பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
மேலும் கருவேலன்குளம் பகுதியிலிருந்து மஞ்சுவிளை வழியாக வடக்கு பச்சையாறு அணைகட்டு பகுதிக்கு வரும் சாலை பழுதுடைந்துள்ளது அதனை சரி செய்துதரும்படியும் மற்றும் மஞ்சுவிளை பகுதியையும் காமராஜர் நகர் பகுதியையும் இணைப்பதற்கு பாலம் கட்டுவதற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். என இரண்டு கோரிக்கைளுக்கும் நீர்வளத்துறையினரிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தெரிவித்தார்.
இ;ந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், களக்காடு நகராட்சி துணைத் தலைவர் பி.சி.ராஜன், நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி, உதவி பொறியாளர் பாஸ்கரன், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)
