» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!

ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (35). இவருடைய மனைவி பேச்சியம்மாள் (33). இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கடந்த சில காலமாகவே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக்கொண்டு பேச்சியம்மாள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். 

அவரைப் பின்தொடர்ந்து வந்த சுதாகர், பேருந்து நிலையத்திலேயே வைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பேச்சியம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

கொலை செய்த கையோடு சுதாகர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சந்திப்பு போலீசார், பேச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுதாகரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory