» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
வியாழன் 18, மே 2023 12:44:47 PM (IST)

திருநெல்வேலியில் ரூ.33.02 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அமைக்கப்படவுள்ள "பொருநை” அருங்காட்சியகத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
 உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ரெட்டியார்ப்பட்டி மழை அடிவாரத்தில் ரூ.33.02 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பொருநை அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டு தொடரில், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் பொருநை அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்ததற்கிணங்க, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மழை அடிவாரத்தில் தொல்லியல்துறை சார்பில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.33.02 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பொருநை அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (18.05.2023) தொடங்கி வைத்தார். 
 ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயள், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
 பொருநை நாகரீகம் பொதிகை மழையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மூன்று மாவட்டங்களில் பயனிக்க கூடிய இடங்களில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று பகுதிகளிலும் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிபடுத்துவதற்காக ரூ.33.02 கோடி செலவில் பொருநை அரசு அருங்காட்சியகம் இங்கு அமைக்கப்படவுள்ளது.
  இப்பணிகள் இன்று தொடங்கி 18 மாதங்களில் அணைத்து பணிகளும் முடிவடைந்துவிடும். ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை தனித்தனியாக வைப்பதற்கு ஒரு அறையும், நிர்வாகத்திற்கு ஒரு அறையும் கட்டப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை காண வருவோர்களுக்கு சிற்றுண்டி வசதி, சாலை வசதி, பார்கிங் வசதி போன்றவை அமையவிருக்கிறது. மகளிர் சுய உதவிகுழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்வதற்கும் விற்பனைக் கூடம் அமைக்கப்படவுள்ளது. 
 தற்போது 13 ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் தென் மாவட்ட மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் நாகரீக தொட்டிலாகவும் விளங்கி இந்த திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையவுள்ளது.. சமஸ்கிருதம் மொழியில் இருந்து தான் தமிழ் உருவாகியது என்ற மாயயை உடைத்தெறிந்தவர் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . இந்த பொருநை அரசு அருங்காட்சியகப் பணிகளை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
அதனைத் தொடர்ந்து, பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாராம்பரிய கட்டிட செயற்பொறியாளர் மணிகண்டன்,  உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் சண்முகம், தொல்லியல் அலுவலர் ஹரி கோபாலன்,  பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)




