» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 29, ஜூலை 2024 4:26:40 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேற நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (29.07.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனுக்களை பதிவு செய்வதற்கு கோரிக்கையின் தன்மைக்கேற்ப 8 தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தது.
முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மேலும் வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்கு அருகில் அமைந்துள்ள வாழ்வாதார வழிகாட்டி மையத்திற்கு அனுப்பி தீர்வு காணப்பட்டது.
மேலும், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துறை ரீதியாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், பாளையங்கோட்டை வட்டம், மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஷேக் முகம்மது என்பவர் நீரில் மூழ்கி இறந்தமைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை அன்னாரது மனைவி சித்திக் ஆயிஷா என்பவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5,900/- மதிப்பிலான விலையில்லா தையல் இந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயா மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
