» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தடகளப் போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன் பட்டம் வென்று சாதனை
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:08:07 AM (IST)
அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற மாவட்டங்களுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் ஸ்டக் ஹை-டெக் பள்ளியில் மாவட்டங்களுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்பபோட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்பேர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
12 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் தமிழன் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் அஜய் பிரகாஷ் குண்டு எறிதலில் இரண்டாமிடமும், மாணவர்கள் தமிழன், சாஷித் ஹமீது, பால குரு ராஜன், ராகுல் ஆகியோர் 4 க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர்.
14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகம்மது இலியாஸ் 100 மீ, 200 மீ மற்றும் நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மாணவர் சக்தி சர்வேஷ் குண்டு எறிதலில் முதலிடமும், மாணவர் பிரபாகர் 400 மீ மற்றும் 600 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் ஜெரோமியா 400 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர்கள் முகம்மது இலியாஸ், கவியரசன், ஜெரோமியா, சமஸ் நவீன் ஆகியோர் தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகம்மது வொவைஸ் முகைதீன் 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் அஜீஸ் முஸ்தபா 400 மீ ஓட்டத்தில் முதலிடமும், 800 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் மதன்ராஜ் குண்டு எறிதல். வட்டு எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.
19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகம்மது அக்சின் 100 மீ மற்றும் 400 மீ ஓட்டத்தில் முதலிடமும், முகமது அஜ்மல் வட்டு எறிதலில் இரண்டாமிடமும், மாணவர்கள் முகமது அகசின், லோகேஸ், புகழேந்தி, சுப சக்திவேல் ஆகியோர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றனர்.
மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்று சாதனை படைத்தனர்.17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இப்பள்ளி மாணவி மாணிக்க ஸ்ரீ 800 மற்றும் 1500 மீ ஓட்டத்தில் முதலிடம் பெற்றார்.
வெற்றி பெற்றவர்களை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.