» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கார் ஏற்றி கொல்ல முயன்ற இளைஞர் கைது
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 12:04:53 PM (IST)
சாத்தான்குளம் அருகே சவரத்தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் தேடப்பட்ட இளைஞர் நெல்லையில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் குமார் மகன் சுப்பிரமணியன் (28). இவர், முதலூரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பக்கத்துவீட்டில் வசிக்கும் சவுந்தரபாண்டி மகன் லிங்ககுமார் (25) என்பவருக்கும்நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 4ம்தேதி சுப்பிரமணியன், சுப்பிரமணியபுரம் விலக்கு இசக்கியம்மன் கோயில் அருகே பைக்கை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந் தார். அப்போதுஅங்கு காரில் வந்த லிங்ககுமார், முன்விரோதம் காரணமாக அங்கு நின்று கொண்டிருந்தசுப்பிரமணியன் மீது காரில் வேகமாக வந்து மோதியதாக கூறப்படுகிறது. இதில்சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந் தார். உடனடியாகஅவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில்தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா வழக்குபதிந்து லிங்க குமாரை தேடிவந்தனர். இந்நிலையில்நெல்லை பாளையங் கோட்டையில்பதுங்கி இருந்த லிங்ககுமாரை தனிப்படை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)

போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
சனி 26, ஏப்ரல் 2025 10:31:17 AM (IST)

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)
