» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)
வீட்டில் ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் பணங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா தென்காசி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். இதையொட்டி டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதம் பதுக்கல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் உள்ளன. தென்காசி மாவட்டம் சுரண்டையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் காவலரை தாக்கிய வழக்கில், பங்களா சுரண்டையை சேர்ந்த கோழி அருள் உள்பட 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, கோழி அருள் நான் ராக்கெட் ராஜாவுடன் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ராக்கெட் ராஜாவிடம் விசாரணை நடத்த கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது ராக்கெட் ராஜா வீட்டில் ராக்கெட் லாஞ்சரும், ஏகே-47 ரக துப்பாக்கிகளும் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் கிடந்ததாக போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
இதனால் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக ராக்கெட் ராஜா மீது ஆயுத பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக இந்த வழக்கானது நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ராக்கெட் ராஜா நேரில் ஆஜர் ஆனார்.
ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதையொட்டி, தென்காசி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 40-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோன்று நீதிமன்றத்திற்குள் வரும் வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகள்: ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்!
சனி 31, ஜனவரி 2026 5:25:10 PM (IST)

நெல்லை மாநகராட்சியில் காலை உணவை குப்பையில் வீசிய தூய்மை பணியாளர்கள்
சனி 31, ஜனவரி 2026 8:36:34 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!
வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)

காவல் நிலையத்தில் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆஜர்!
வெள்ளி 30, ஜனவரி 2026 10:10:13 AM (IST)

உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் : தென்காசியில் பிரேமலதா பேட்டி
வெள்ளி 30, ஜனவரி 2026 8:28:10 AM (IST)

நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டி: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 29, ஜனவரி 2026 4:43:56 PM (IST)

