» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 3:09:46 PM (IST)

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
பராசக்தி மகளிர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் குற்றாலத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். நாகேஸ்வரி தலைமை தாங்கினார்.
இக்கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினர் எம்பவர் சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:
மொபைல் போன் பயன்பாட்டில் குறைகள் இருந்தால் பாதிக்கப்படுகின்ற வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் அந்தந்த மாவட்டங்களில் நுகர்வோர் குறைதீர் மன்றங்களை அணுகி உரிய பரிகாரம் பெற முடியும்;. நுகர்வோர் பாதுகாப்பில் ஒரு பொருள் அல்லது சேவையை பெறும் பொழுது கண்டிப்பாக ரசீது கேட்டு பெற வேண்டும். மாணவர்கள் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை அணுக தயங்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் இணைப்பேராசிரியை அனிதா வரவேற்றார். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் துணைப் பொது மேலாளர்கள் மாயா, விஜய் கிருஷ்ணா சிறப்புரை ஆற்றினர். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய செயலாளர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு கருத்துரை வழங்கினர். பராசக்தி கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை ஜெய்சுதா தேவி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

முனைவர். ந. அசோகன் MA,Aug 12, 2024 - 03:52:30 PM | Posted IP 172.7*****