» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இன்னோவேஷன் மராத்தான்: தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:47:57 PM (IST)

இன்னோவேஷன் மராத்தான் போட்டியில் தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் 15-ம் இடமும் மாநிலத்தில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ATL இன்னோவேஷன் மராத்தான் 2021-22ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் "உதிரம் எடுக்காமலேயே நம் உடலின் இரத்த சோகை அளவினைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் கருவி" கண்டுபிடிப்பிற்காக தேசிய அளவில் 15-ம் இடமும் நம் மாநிலத்தில் முதல் இடமும் பெற்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் முதலிடம் பெற்ற பள்ளி மாணவ / மாணவியர்கள் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவினை நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியின் ATL Innovators மாணவர்களின் திறமையைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக 78வது சுதந்திர தின விழாவைச் செங்கோட்டையில் நேரில் காண்பதற்கான அதிகாரப்பூர்வக் கடிதம் கிடைக்கப் பெற்றது.
அதில் மாணவிகள் சுபிட்சா, பிரார்த்தனா, பொறுப்பாசிரியை ஜித்தாமோல் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் லெ.பாபு ராதாகிருஷ்ணன் அனைவரும் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டனர். மேலும் அவர்களுக்கு 78வது சுதந்திர தின விழாவினையும், பாரதப் பிரதமரின் உரையையும் நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக இம்மாணவர்களை பள்ளித் தலைவர் பாலு, பள்ளிச் செயலர் டி.எஸ். பிரேம்சுந்தர், தலைமையாசிரியர் லெ.பாபு ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் வாழ்த்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

Navaladi KarthikeyanAug 13, 2024 - 04:24:56 PM | Posted IP 162.1*****