» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இலங்கை பர்னிச்சர் கடையை முற்றுகையிட்ட மே 17 அமைப்பினர்: தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 3:40:44 PM (IST)

தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் வரும் இலங்கை கடற்படை மீது தமிழக காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்ய தயங்குவது ஏன்? என்று திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினார்.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவது, சிறைபிடிப்பது, படகை மோதி கொலை செய்வதை கண்டித்தும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தூத்துக்குடியில் உள்ள இலங்கையைச் சேர்ந்த நபரால் நடத்தப்படும் தம்ரோ பர்னிச்சர் என்ற கடையை மே 17 இயக்கம், எஸ்டிபிஐ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்ட தம்ரோ பர்னிச்சர் கடை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, பேராசிரியை பாத்திமா பாபு, காந்தி மள்ளர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி குரூஸ் சிலை அருகே வந்தனர் அவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து முழக்கம் இடாமல் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி கூறுகையில் "தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தொடர்ந்து தமிழக முழுவதும் இலங்கையைச் சேர்ந்த தம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தக் கடைகளில் இனி தமிழர்கள் யாரும் எந்தவித பொருட்களையும் வாங்க மாட்டோம் என முடிவெடுக்க இந்த போராட்டம் நடைபெறுகிறது. தமிழக மீனவர்களை கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல் நடத்தி கொலை செய்து வரும் இலங்கை கடற்படை மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய தயங்குவது ஏன்? இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தை விரைவில் நாட உள்ளதாக அவர் தெரிவித்தார்
மக்கள் கருத்து
கந்தசாமிAug 13, 2024 - 08:27:41 PM | Posted IP 172.7*****
ஏயதவனை விட்டு அம்பை நோகும் அற்ப செயல்
KumarAug 13, 2024 - 06:27:21 PM | Posted IP 162.1*****
இது வெளியுறவுதுறை நடவடிக்கை வேண்டும் என்றுகூட தெரியாத ஒரு தலைவர்
ematrukaaranAug 13, 2024 - 04:19:52 PM | Posted IP 162.1*****
Ivarin nermai santhegathirkuuriyathu..... yarai ematra intha aarpaattam?
UNMAIAug 13, 2024 - 03:59:09 PM | Posted IP 172.7*****
இவன் ஒரு டுபாக்கூர்.
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)





IndianAug 14, 2024 - 09:43:51 AM | Posted IP 162.1*****