» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:07:07 AM (IST)

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், சமூக நீதி சமத்துவத்திற்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ரமேஷ் முன்னிலை வைத்தார். அரசியல் ஆலோசனை குழு செயலாளர் முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் முருகபூபதி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாநில மீனவர் அணி செயலாளர் தர்மம், நிர்வாகிகள் வீரபாண்டி செல்லச்சாமி, மாவட்ட தலைவர் பேச்சி ராஜா, பொருளாளர் காயல் அமுலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் வீரபாண்டி, சரவணன், மணி, பிஎஸ் முருகன், ஜெயக்கொடி, இக்பால், ராஜ்குமார், நக்கீரன், பொன்ராஜ், மகாராஜா உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

PEOPLESAug 14, 2024 - 03:58:57 PM | Posted IP 172.7*****