» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்-ஒழுங்கு மோசம் : நெல்லையில் சசிகலா பேச்சு
புதன் 14, ஆகஸ்ட் 2024 11:24:19 AM (IST)

"தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நெல்லை மாவட்டத்தில் 240 கொலைகள் நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு மோசமாக உள்ளது” என்று சசிகலா பேசினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனது 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை நெல்ைல கொக்கிரகுளத்தில் நேற்று தொடங்கினார். அங்குள்ள தலைவர்களின் சிலைகளுக்கு அவர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் டவுன், பேட்டை, மானூர், தாழையூத்து பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து பேசினார்.
வேனில் இருந்தபடி சசிகலா பேசியதாவது: எம்.ஜி.ஆர். முதன் முதலாக கட்சி ஆரம்பித்தபோது இது மக்களுக்கான இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் உதவிகளை செய்தார். அவரது வழியில் வந்த ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்றினார். ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கொடுக்கவில்லை. அரிசியும் தரமானதாக வழங்கவில்லை. மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்வதாக கூறி அதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் எதுவுமே செய்யவில்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரையிலும் இந்த தி.மு.க. ஆட்சிக்காரர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை?.
நெல்லை மாநகராட்சியில் எந்த வேலையும் நடக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. கவுன்சிலர்களும் அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்களிடமிருந்து பணத்தை பறிக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நெல்லை மாவட்டத்தில் 240 கொலைகள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்ன விலை? என்று கேட்கும் அளவுக்கு மோசமாக உள்ளது. நான் என்னென்ன தவறுகள் நடக்கிறது என்று சுட்டிக்காட்டி வருகிறேன். அதை முதல்-அமைச்சர் பார்த்து சரிசெய்ய வேண்டும். ஜெயலலிதா காட்டிய வழி தான் என்னுடைய வழியும். அவரது வழியில் எப்போதும் நான் மக்களாகிய உங்களோடு தான் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
