» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்,தங்கை பலி!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 4:23:14 PM (IST)
நெல்லையில் லாரி மீது கார் மோதியதில் அரசு பஸ் டிரைவர், அவரது அக்காள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள குறப்புலம் கல்வெட்டான்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திர சிங் (50). அரசு போக்குவரத்து கழக குழித்துறை பணிமனையில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஷெர்லின் (46), பள்ளி ஆசிரியையாக உள்ளார்.
இவர்களுடைய மகள் அபி ஷெரின் (19). பிளஸ்-2 முடித்துள்ள இவருக்கு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் ஈரோடு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. இதையடுத்து அபி ஷெரினுக்கு கல்லூரியில் சேர்க்கையை உறுதி செய்வதற்காக 3 பேரும் ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டனர். அவர்களுடன் ஜெயச்சந்திர சிங்கின் அக்காள் மணலிகரையைச் சேர்ந்த எட்வின் சார்லஸ் என்பவருடைய மனைவி ஷைலஜா (55) உடன் சென்றார்.
கல்லூரிக்கு சென்று அங்கு சேர்ந்து படிப்பதற்கான பணிகளை முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலையில் அங்கிருந்து காரில் 4 பேரும் புறப்பட்டனர். காரை ஜெயச்சந்திர சிங் ஓட்டினார். இன்று அதிகாலையில் நெல்லையை கடந்து கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் ஒரு லாரி சென்றது. அந்த லாரியை முந்திச்செல்வதற்கு ஜெயச்சந்திர சிங் முயன்றார்.
எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியது. காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஜெயச்சந்திர சிங், முன் இருக்கையில் இருந்த அவருடைய அக்காள் ஷைலஜா ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின் இருக்கையில் இருந்த ஷெர்லின், அபி ஷெரின் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் ஷெர்லின், அபி ஷெரின் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரின் முன்பக்க இடிபாடுகளை அகற்றி ஜெயச்சந்திர சிங், ஷைலஜா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)
