» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா
வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

ரோட்டரி அரவிந்த் கண் வங்கி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 39வது தேசிய கண் தான இரு வார நிறைவு விழா கலையரங்கில் நடைபெற்றது.
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமை தாங்கினார். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஆர் மீனாட்சி அனைவரையும் வரவேற்றார். முக்கிய விருந்தினராக விஞ்ஞானி கூடங்குளம் அணுமின் நிலைய தள இயக்குனர் ஜாய் பி.வர்கீஸ் கலந்து கொண்டு கண் தானம் வழங்கிய குடும்பத்தினரை பாராட்டி சிறப்புரையாற்றினார். அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை ஆலோசகர் டாக்டர் ஆர். ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவர் டாக்டர் வி ராமலட்சுமி, திருநெல்வேலி இந்திய மருத்துவக் கழக தலைவர் டாக்டர். சுப்பிரமணியன், அரிமா மாவட்ட ஆளுநர் லயன் சங்கரவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கண் தானம் செய்த குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
கண் தானம் பெற உதவி செய்த சிவகாசி பிரைட் விஷன் சாரிடபிள் டிரஸ்ட் டாக்டர் ஜெ.கணேஷ், பாவூர்சத்திரம் அரிமா சங்கம் கே.ஆர்.பி இளங்கோ, அண்ணாமலையார் பக்தர் குழு ஆர். ஐயப்பன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மிகச் சிறப்பாக விழிப்புணர்வு பணியாற்றிய கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் கவிஞர் சு முத்துசாமி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கபட்டது.
நிகழ்வில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர். டாக்டர். சுபாஸ் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கருவிழி பிரிவு மருத்துவர் டாக்டர் திவ்யன் ஆபிரகாம் நன்றி கூறினார். ரோட்டரி கழகத்தினர், அரிமா சங்கத்தினர், கண் தானம் செய்த குடும்பத்தினர், பொதுமக்கள், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீண்ட நாட்களாக குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா: SC, ST ஆணையத் தலைவர் தகவல்
திங்கள் 24, மார்ச் 2025 5:49:44 PM (IST)

நெல்லையில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 12:37:39 PM (IST)

தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது
திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
