» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தீபாவளி பண்டிகை எதிரொலி : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு - பயணிகள் அதிர்ச்சி!

செவ்வாய் 29, அக்டோபர் 2024 11:21:20 AM (IST)

தீபாவளி பண்டிகை விடுமுறை எதிரொலியாக தென் மாவட்டங்களுக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.  

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். ரெயில்கள், அரசு, ஆம்னி பஸ்கள், விமானங்கள், மூலம் மக்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை தொடர்ந்து, விமான கட்டணங்கள் பன் மடங்கு உயர்ந்துள்ளன. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா விமானங்கள் கட்டணகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109, தற்போது, ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300, தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்துள்ளது. விமான கட்டண உயர்வு பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

பண உலக முட்டாள்Oct 29, 2024 - 08:24:36 PM | Posted IP 172.7*****

இது தான் BBA MBA படித்தவர்கள் உருவாக்கியது திருட்டு துட்டு பிசினஸ் .. எல்லாம் பணம் பணம் பணம் பணம் பணம்

தமிழன்Oct 29, 2024 - 11:55:11 AM | Posted IP 172.7*****

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் உயர்கிறது.ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வது குற்றமாகிறது. எது நியாயம் என்று புரியவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory