» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: டிச.4-க்கு விசாரணை ஒத்திவைப்பு
வெள்ளி 8, நவம்பர் 2024 12:30:30 PM (IST)
அம்பையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்த விசாரணை விசாரணை டிச.4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் சரகப் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்த விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்ட பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக, அப்போதைய காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர்சிங், ஆய்வாளர் ராஜகுமாரி உள்பட 14 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. நீதித்துறை நடுவர் மனுவை விசாரித்தார். இந்த விசாரணையில் பல்வீர் சிங் உள்பட 4 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை டிச.4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.