» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் இளையோர் திருவிழா போட்டிகள் : நேரு யுவ கேந்திரா அலுவலர் தகவல்!

வியாழன் 28, நவம்பர் 2024 4:50:50 PM (IST)

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா டிச.4ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக நேரு யுவ கேந்திரா அலுவலர் ஞான சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட நேரு யுவ கேந்திரா நடத்தும் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவானது 04.12.2024 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. 

நேரு யுவ கேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக் கொண்டுவரும் விதமாக இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. அவ்வண்ணமே இந்த ஆண்டும் வெகு சிறப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த விழாவானது நடைபெற உள்ளது. 

இப்போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடையும் இந்த பொன்னான வாய்ப்பை நமது திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களும், மாணவ மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

நடைபெறும் போட்டிகள் 1 அறிவியல் விழா கண்காட்சி தனி நபர் போட்டி (1ம் பரிசு ரூ.3000, 2ம் பரிசு ரூ.2000, 3ம் பரிசு ரூ.1500), 2 அறிவியல் விழா கண்காட்சி குழுப் போட்டி (1ம் பரிசு ரூ.7000, 2ம் பரிசு ரூ.5000, 3ம் பரிசு ரூ.3000), 3, இளம் எழுத்தாளர் போட்டி -கவிதை 4.இளம் கலைஞர் போட்டி ஓவியம், 5. கைப்பேசி புகைப்பட போட்டி (வரிசை எண் 3 முதல் 5 வரை உள்ள போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.2,500. 2ம் பரிசு ரூ.1500, 3ம் பரிசு 1000),

6. பிரகடன பேச்சுப் போட்டி (முதல் பரிசு ரூ 5000, 2ம் பரிசு ரூ 2500, 3ம் பரிசு 1500). 7. கலைத்திருவிழா குழு நடனப்போட்டி (முதல் பரிசு ரூ.7000, 2ம் பரிசு ரூ 5000, 3ம் பரிசு ரூ 3000) தகுதிகள் வயது வரம்பு 15 முதல் 29 வரை (01.09.2024-க்குள்), போட்டியில் பங்கு பெறுபவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இந்த கலைப்போட்டிகளின் தலைப்பு கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் இருக்க வேண்டும்.

1) வளர்ந்த இந்தியாவின் தீர்மானம்

2) காலனித்துவ மனநிலையின் எந்த தடயத்தையும் நீக்குதல்

3) எங்கள் மரபு மீது பெருமிதம் கொள்வது

4) நமது ஒற்றுமை பலம்

5) குடிமக்களின் கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுதல்.

மேற்கண்ட போட்டிகள் தமிழிலில் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். கலைப் போட்டிகளுக்கு மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியுடையவர். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மாவட்ட அளவிலான முன்பதிவிற்கு [email protected] என்ற இமெயில் முகவரியில் 02.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

போட்டி நடைபெறும் நாள் அன்று போட்டியாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட விபரத்துடன், தங்களுடைய ஆதார். பிறப்பு சான்றிதழ், பள்ளி/கல்லூரியை சார்ந்தவர்கள் பிறந்த தேதி குறிப்பிடப்பட்ட உறுதி சான்றிதழ் (Bonafide Certificate) பள்ளி தலைமை ஆசிரியர்/ கல்லூரி முதல்வர்களிடம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் தகவலுக்கு நேரு யுவ கேந்திரா, டிரைவர்ஸ் காலனி, EPF ஆபிஸ் ரோடு, என்.ஜி.ஓ ஏ காலனி, திருநெல்வேலி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0462-2552803, 9489119313, 9489462140 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

ANTON Tim priyanDec 1, 2024 - 06:55:08 PM | Posted IP 162.1*****

poem writing Tamil.

ANTON Tim priyanNov 30, 2024 - 12:19:56 PM | Posted IP 172.7*****

Poem writing Tamil St. Xavier's College. Tirunelveli

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory