» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதியவர் கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை : தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வெள்ளி 29, நவம்பர் 2024 8:24:08 AM (IST)
முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சாமுவேல் துரைபாண்டி(70) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேல மெஞ்ஞானபுரம் கோவிந்தராஜ் என்பவரின் மகன் ஏழுமலை (45) என்பவரை குற்றாலம் காவல் துறையினர கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனோஜ் குமார் குற்றவாளி ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த குற்றாலம் காவல்துறை யினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)

பொருநை அருங்காட்சியகம்: நிதிஅமைச்சருக்கு சென்னை வாழ் நெல்லை மக்கள் பாராட்டு
வெள்ளி 2, ஜனவரி 2026 8:30:06 AM (IST)

தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்: டிஐஜி சரவணன் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:24:46 AM (IST)

நெல்லை, குமரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!
வியாழன் 1, ஜனவரி 2026 12:35:05 PM (IST)

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!
புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)


