» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிலாளர்களுக்கு இருக்கை அளிக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!
வியாழன் 16, ஜனவரி 2025 4:00:24 PM (IST)
நெல்லை மாவட்டத்தில், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரத்தில் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகள் ஏற்படுத்தாமல் இருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதனடிப்படையில், 2024-ஆம் ஆண்டில் தொழிலாளர் நலத்துறை வாயிலாக ஆய்வு மேற்கொண்டதில் தமிழில் பெயர்ப்பலகை முறையாக வைக்காத 91 கடைகள் /வணிக நிறுவனங்கள் / உணவு நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, இதுவரை அபராதமாக ரூ.75,500/- விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக சென்று திருநெல்வேலி டவுண், பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பேருந்து நிலையம், வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்தும், பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், முறையாக தமிழில் பெயர்பலகை அமைக்காத 84 நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம் மற்றும் 1958-ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் சட்டத்தின்படி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள் /வணிக நிறுவனங்கள் / உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

SRINIVASANJan 17, 2025 - 10:46:32 AM | Posted IP 162.1*****