» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு உயிரிழப்பு : எஸ்பி, காவல்துறையினர் அஞ்சலி!
வெள்ளி 17, ஜனவரி 2025 10:52:05 AM (IST)
தென்காசி அருகே விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு எஸ்பி அரவிந்த் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
தென்காசி ஆபாத் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலி (40). கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய இவர் பின்னர் மாவட்ட போலீஸ் தனிப்படை பிரிவில் வேலை செய்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி இரவில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் செய்யது அலி பலத்த காயமடைந்தார். அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான தென்காசிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால், துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மற்றும் போலீசார், குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் அடக்க தலத்தில், போலீசார் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செய்யது அலி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
