» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திசையன்விளை வட்டத்தில் வளர்ச்சி பணிகள் : ஆட்சியர் சுகுமார் ஆய்வு

வியாழன் 20, மார்ச் 2025 11:43:40 AM (IST)



"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டத்திலும் முதற்கட்ட சுற்று நிறைவுபெற்று, இரண்டாம் சுற்றாக மானூர், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை வட்டம் ஆய்வு செய்யப்பட்டு இன்றையதினம் நான்காம் வட்டமாக திசையன்விளை வட்டத்திற்குட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அடிப்படை வசதிகள், கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்து, காவல் நிலையத்தில் வழக்கு பதிவுகள் குறித்து மாவட் ஆட்சியர் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் குறுவட்டம், மன்னார்புரம் தோட்டக்கலைத்துறை சார்பில் அந்தோணியம்மாள் என்பவருக்கு சொட்டு நீர் பாசனம் திட்டத்தின் கீழ் ரூ.1,53,585 மானியத்தில் 2 எக்டர் பரப்பில் மேற்கொண்டு வரும் தென்னை சாகுபடியும், ரூ.24 ஆயிரம் மானியத்தில் 10 தேனீ பெட்டகத்தின் மூலம் தேனீ வளர்ப்பு முறையினையும், 2 1/2 ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுடி செய்யப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

மேலும், மன்னார்புரம் பகுதியிலுள்ள இராஜீவ்காந்தி நகரில் வேளாண்மைத்துறை சார்பில் பயனாளிக்கு 1 ஏக்கர் பரப்பில் நவீன கடலை சாகுடிக்கு மானிய விலையில் கடலையினை வழங்கி, சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ள பகுதியினை பார்வையிட்டதோடு, 1 1/2 ஏக்கர் பரப்பில் மிளகாய் சாகுபடிக்காக ரூ.16 ஆயிரம் மானியத்தில் நீர் தெளிப்பான் வழங்கி அதன் மூலம் மிளகாய் சாகுபடி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

திசையன்விளை வட்டம் கூடுதாழை கிராமத்தில் ரூ.15 கோடி மதிப்பில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகளுக்கு கடந்த 21.01.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

தொடர்ந்து, பற்பநாதபுரம் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, குஞ்சன்விளையில் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளியில் வீடு கட்டுமானத்திற்கான இடத்தினையும் பார்வையிட்டார். 

மேலும், குட்டம் பகுதியில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்கள். அதற்காக 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். 
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், இடையன்குடியில் அமைந்துள்ள இராபர்ட் கால்டுவெல் நினைவு இல்லம் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ரூ.1.03 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

தொடர்ந்து, இடையன்குடியிலுள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகள் வயதுக்கேற்ப உடல் எடை, உயரம் போன்றவை குறித்தும், உணவின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூாட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும், மேலும், இப்பகுதிக்கு மேற்கொள்ள வேண்டிய தேவையான அடிப்படை பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், ஆய்வு மேற்கொண்டார்கள்.திசையன்விளை பேருந்து நிலையம் மற்றும் திசையன்விளை பேரூராட்சி பகுதியில் மின்விளக்குகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், ஆய்வு செய்தார்கள்.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டுநீர் பாசனம் பெற்று விவசாயம் செய்து வரும் விவசாயி வில்விராயன் (எ)ராஜேஷ் கூறுகையில் நான் திசையன்விளை வட்டம் அப்புவினள ஊராட்சி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 25 ஏக்கர் நிலம் மன்னார்புரத்தில் உள்ளது. அதில் 5 ஏக்கர் நிலத்தில் தென்ணை சாகுபடி செய்து வருகிறேன். இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தென்னை மரக்கன்றுகளுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமபட்டு வந்தேன். தண்ணீர் பற்றாகுறையை போக்குவதற்கு தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் கேட்டேன். அதற்கு தமிழ்நாடு அரசு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் வழங்கி வருகிறது. அதற்கு விண்ணப்பித்து பயன் பெறுங்கள் என்று தெரிவித்தார்கள். அதன்படி மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் பெற்று தென்ணை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சல் செய்து அதிகமாக மகசூல் பெற்று வருகிறேன். இதன் மூலம் எனது வாழ்வாதாரம் பெருகி உள்ளது. இத்தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மகளிர் திட்டம் இலக்குவன், வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இளங்கோ, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஜெ/பிரின் கிரேசியா, திசையன்விளை வட்டாட்சியர் நாராயணன், உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory