» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய ஆலிவ் ரெட்லி ஆமை : வனத்துறையினர் விசாரணை
ஞாயிறு 23, மார்ச் 2025 9:00:55 AM (IST)

தூத்துக்குடியில் அருகே உள்ள கோவளம் கடற்கரையில் சுமார் 60 கிலோ எடையுள்ள ஆலிவ் ரெட்லி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
தூத்துக்குடி முள்ளக்காடு ஊராட்சிக்குள்பட்ட கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனத்துறையினருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் உத்தரவின்படி, வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இது ஆலிவ் ரெட்லி ரக ஆமை என்பதும், இது மீனவர்களின் வலைகளில் சிக்கி காயமடைந்தோ, அல்லது பிற உயிரினங்களால் தாக்கப்பட்டோ இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, உயிரிழந்த ஆமை கால்நடை மருத்துவர்கள் மூலம் உடல்கூராய்வு செய்யப்பட்டு, பின்னர் கடற்கரையில் புதைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
Kvp girlMar 23, 2025 - 10:11:26 AM | Posted IP 172.7*****
ஏன் கடல் நீரில் கழிவுகள் கொட்டி ஆமை இறந்திருக்க கூடாது
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)



மனிதன்Mar 24, 2025 - 09:01:23 AM | Posted IP 162.1*****