» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

நெல்லையில் பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரத்தில் 6 மாணவிகள் சஸ்பெண்ட் செயப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையானது தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர். பின்னர் ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல் டம்ளரை மாணவிகள் எல்லோரும் எடுத்து சியர்ஸ் போட்டுவிட்டு குடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருக்கும் வகுப்பறை பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தான் என்பதும், அந்த மாணவிகள் அதே பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் மது குடித்த மாணவிகள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது தெரியவந்தது. மேலும் விடுதியில் தற்போது பராமரிப்பு பணி நடக்கும் நிலையில், பள்ளி வளாகத்தில் காலியாக இருக்கும் வகுப்பறையில் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த வகுப்பறையில் மற்ற மாணவிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தான், 9-ம் வகுப்பு மாணவிகள் குழுவாக அமர்ந்து மது குடித்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம், மாணவிகள் மதுபானம் அருந்திய விவகாரம் தொடர்பாக அந்த மாணவிகளை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர். பின்னர் அநாகரீகமாக செயல்பட்ட 6 மாணவிகளை சஸ்பெண்டு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி மகளிர் அரபிக் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா
வியாழன் 29, ஜனவரி 2026 8:21:27 AM (IST)

திருநெல்வேலியில் 2480 தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!
புதன் 28, ஜனவரி 2026 5:27:33 PM (IST)

கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிரைவர் படுகாயம்
புதன் 28, ஜனவரி 2026 8:33:50 AM (IST)

மூதாட்டியை அடித்துக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
செவ்வாய் 27, ஜனவரி 2026 9:24:25 PM (IST)

கர்ப்பிணி பெண் மர்மசாவில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய அரசு ஊழியர் கைது!
செவ்வாய் 27, ஜனவரி 2026 7:48:56 AM (IST)

கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவியில் குடியரசு தினவிழா கோலாகலம்
திங்கள் 26, ஜனவரி 2026 8:35:39 PM (IST)


டேய்Dec 13, 2025 - 06:02:33 PM | Posted IP 172.7*****