» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மூதாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
செவ்வாய் 27, ஜனவரி 2026 9:24:25 PM (IST)

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (65) இவர் தனது மகள் வழி பேரனுக்கு மட்டும் அடிக்கடி பணம் கொடுப்பதாக கூறி அவரது உறவினர்கள் 5 பேர் சேர்ந்து கைகளால் அடித்தும் கால்களால் வயிற்றில் எட்டி உதைத்தும், மேலும் கம்பி மற்றும் குக்கரால் அடித்து கொடுங்காயம் ஏற்படுத்திக் கொலை செய்துள்ளனர்.
இது பற்றி விஸ்வநாதபுரம் புதுமனை தெரு, பிச்சை வாத்தியார் காம்பவுண்டில் குடியிருந்து வந்த மும்தாஜின் மருமகன் அப்துல் காதர் (வயது 52) என்பவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் 10. 02. 2020 அன்று இரவு 12:30 மணிக்கு சம்பவம் நடைபெற்றதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கோட்டை நாடார் தெருவில் வசித்து வரும் அமின்ஷா என்பவரின் மகன் அப்துல் சலாம், செங்கோட்டை சாம்பவர் தெருவில் குடியிருந்து வரும் நாகூர் மீரான் என்பவரது மகன் அப்துல் ஜாபர் (52) செங்கோட்டை நாடார் தெருவில் வசித்து வரும் சேக் மதார் என்பவரின் மகன் காதர் மீர்ஷா (52) செங்கோட்டை நாடார் தெருவில் வசித்து வரும் அமீன்சா என்பவரின் மனைவி அமினா (40) செங்கோட்டை நாடார் தெருவில் வசித்து வரும் காதர் மீர்ஷா என்பவரின் மகள் பாத்திமா பீவி (48) ஆகியோரை கைது செய்தனர்
இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜவேலு முன்பு விசாரணைக்கு வந்தது இந்நிலையில் நேற்று நீதிபதி இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குதீர்ப்பு வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில் செங்கோட்டை புதுமனை ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சார்ந்த முகமது யூசுப் என்பவரின் மகள் மும்தாஜ் (வயது65) என்பவரை அடித்து கொலை செய்ததாக அவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த அப்துல் சலாம், அப்துல் ஜாபர், காதர் மீர்ஷா, அமினா, பாத்திமா பீவி ஆகிய ஐந்து பேர்களுக்கும் ஆயுள் தண்டனையும் இதில் முதல் குற்றவாளிக்கு அபராதமாக ரூபாய் 3000 மற்ற எதிரிகளுக்கு அபராதமாக வருவார் 2500 விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கவிதா ஆஜராகி வாதாடினார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்ப்பிணி பெண் மர்மசாவில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய அரசு ஊழியர் கைது!
செவ்வாய் 27, ஜனவரி 2026 7:48:56 AM (IST)

கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவியில் குடியரசு தினவிழா கோலாகலம்
திங்கள் 26, ஜனவரி 2026 8:35:39 PM (IST)

திருநெல்வேலியில் குடியரசு தின விழா கோலாகலம் : ஆட்சியர் சுகுமார் தேசிய கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:06:10 PM (IST)

புலிகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு : சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 24, ஜனவரி 2026 5:23:08 PM (IST)

திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!
சனி 24, ஜனவரி 2026 10:35:09 AM (IST)

திருநெல்வேலியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கியது
வியாழன் 22, ஜனவரி 2026 5:39:39 PM (IST)

