» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தங்கை கணவரை தாக்கியதாக மைத்துனர் கைது
திங்கள் 24, மார்ச் 2025 8:46:54 AM (IST)
திசையன்விளை தங்கையின் கணவரை தாக்கியதாக அவரது மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியைசேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வெள்ளப்பாண்டி(40) தொழிலாளி. இவருக்கும் சாத்தான்குளம் அருகே புத்தன் தருவை சேர்ந்த சங்கரன் மகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது. இதனிடையே வெள்ளப்பாண்டி மற்றும் மாமனார் சங்கரன் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்சங்கரன், பேச்சுவார்த்தை நடத்த வீட்டுக்கு வருமாறு வெள்ளப்பாண்டியிடம் போனில் கூறியுள்ளார். இதையடுத்து வெள்ளப்பாண்டி, கடந்த 21ம் தேதி தனது மாமனார்ச ங்கரன் வீட்டுக்குசென்றார். அப்போது வெள்ளப்பாண்டி மனைவியின் சகோதரர் முத்துசாமி (40) என்பவர் வெள்ளப்பாண்டியை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளப்பாண்டி, தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர்ர் அனிதா வழக்குபதிந்து வெள்ளப்பாண்டியை தாக்கிய முத்துசாமியை கைதுசெய்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:13:41 AM (IST)

பொருநை அருங்காட்சியகம்: நிதிஅமைச்சருக்கு சென்னை வாழ் நெல்லை மக்கள் பாராட்டு
வெள்ளி 2, ஜனவரி 2026 8:30:06 AM (IST)

தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்: டிஐஜி சரவணன் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:24:46 AM (IST)

நெல்லை, குமரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!
வியாழன் 1, ஜனவரி 2026 12:35:05 PM (IST)

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!
புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)


