» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)
கடையநல்லூர் அருகே கேபிள் டிவி வயரை சரி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சித்திக். இவர் அப்பகுதியில் கேபிள் ஆபரேட்டராக உள்ளார். இவரது மகன் முகம்மது பாசில் (24), படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக இருந்தார்.
அச்சன்புதூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்றும் மழையும் பெய்ததால் வீடுகளில் சரிவர கேபிள் டி.வி. தெரியவில்லை. எனவே அங்குள்ள தெருவில் கேபிள் டி.வி. வயரை சரி செய்வதற்காக முகம்மது பாசில் இழுத்தார். அப்போது கேபிள் வயர் வழியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட முகம்மது பாசிலை அருகில் உள்ளவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முகம்மது பாசில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)


