» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!
புதன் 18, ஜூன் 2025 11:39:35 AM (IST)
மதுரையில் வருகிற 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வரும், 21ம் தேதி இரவு 9:55க்கு, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 5:40 மணிக்கு மதுரை சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, காலை, 8:45க்கு திருநெல்வேலி செல்லும்.
அதேபோல, 22ம் தேதி இரவு 9:40 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, நள்ளிரவு, 12:30 மணிக்கு மதுரை வரும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:15 மணிக்கு எழும்பூர் சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சாத்துார், கோவில்பட்டியில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை மாநாட்டிற்கு வரும் முருக பக்தர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)


