» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது: கிருஷ்ணசாமி பேட்டி
வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 7:52:02 PM (IST)
ஆட்சி முடியப்போகிறது என்ற எண்ணத்தோடு தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

மேலும் யாரும் யார் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. மாவட்ட ஆட்சியரை யார் கட்டுப்படுத்துகிறார்கள், தாசில்தார் யார் கட்டுப்படுத்துகிறார்கள் எஸ்பியை யார் கட்டுப்படுத்துகிறார்கள், இன்ஸ்பெக்டரை யார் கட்டுப்படுத்துகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பாடு இல்லாமல் சொல்லப்போனால் ஒரு காலத்தில் இந்தியா இப்படித்தான் இருந்தது. நூறு ஆண்டுகளாக தான் தோன்றி தனமாக தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரணாக பழமொழி வந்தது.
அப்பொழுதுதான் ஒரு அரசே இல்லாமல் இருந்தால் எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவவுமோ அதேபோன்று நிலைமை தான் இந்த 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி தமிழகத்தில் ஒரு அரசாங்கம் இருக்கிறதா என கேள்விக்குறி எழுப்பக்கூடிய அளவில் மேலிருந்து கீழ் வரை எந்தவித தொடர்புகளும் இல்லாமல், அவர் அவருக்கு முடிந்த அளவு வாரிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள், ஆட்சி முடியப்போகிறது என்ற எண்ணத்தோடு செய்கிறார்களா அல்லது வேறு எண்ணத்தோடு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அதனால் ஒரு கட்டுப்பாடாக தன்மையை பார்க்க முடிகிறது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.
தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததாக சொல்கிறார்கள் கிராமங்களில் ஒரு சதவீதம் கூட பிரதிபலிக்கிற மாதிரி தெரியவில்லை. எதை ஆதாரமாக வைத்து சொல்லப்படுகிறது என்று தெரியவில்லை. கிராமங்களில் மக்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 11.8% வளர்ச்சி என்று கூறுகிறார்கள் ஆனால் அது பிரதிபலிப்பதாக தெரியவில்லை.
தேர்வு முறைகளை ரத்து பண்ணுவது என்பது தமிழகம் கல்வியில் கீழே போவதற்கு காரணமாகும். தேர்வு முறைகள் இல்லையென்றால் மாணவர்களின் கல்வித் தரம் உயராது. தொழில் நிறுவனங்களில் உள்ளூர்வாசிகளுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கூறினாலே வெளி மாநிலத்தவர்கள் இங்கே வேலைக்கு வரும் பிரச்சனை முடிந்துவிட்டது முதலில் முன்னுரிமையில் இங்கு பாகுபாடு பார்க்காமல் வரக்கூடிய தொழிற்சாலைகளில் எத்தனை சதவீதம் உள்ளூர்வாசிகளை எடுத்துள்ளீர்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்தி உள்ளீர்களா என கேள்வி கேட்டாலே எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும். வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் உள்ளூர் வாசிகளுக்கு எவ்வளவு பேர் வேலை கொடுத்துள்ளார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவில்லை என புகார் வருகிறது. முக்கியமான பதவிகளில் வெளி மாநிலத்தவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஸ்கில்டு தொழிலாளர்களாக இங்கே உள்ளவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
பல்வேறு நிறுவனங்கள் கண்காணிகளாக தமிழர்களை வைத்து தமிழர்களை காலி செய்வார்கள். நமது நாட்டில் பொன்னை காட்டிலும் மதிப்பு மிக்க நிலத்தை கொண்டு போய் தேவையில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறார்கள். அத்தனை நிலங்களும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது இல்லை. இதை ஒரு நில அபகரிப்பு தான் உப்பள தொழில் தான் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய வகையில் வயிற்றில் அடித்துவிட்டு 2000 ஏக்கர் நிலம் எடுப்பது நியாயமாக தென்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒட்டுமொத்தமாக தேவையானதாக உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கக் கூடிய வகையில் அனைத்து மட்டங்களிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்கக் கூடிய வகையில் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவது தான் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து உள்ளார்கள் அதிகமாகிறார்கள். அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு ஒரே புள்ளியில் முடிவு கட்டக்கூடிய விஷயம் என்றார்.
மக்கள் கருத்து
தீர்மானிக்கிறார்Aug 9, 2025 - 08:39:02 AM | Posted IP 172.7*****
நீங்கள் .சொல்வதுதான் உண்மை. அவர்கள் எப்போது உண்மையை சொன்னார்கள்,
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

நெல்லை பல்கலை. மாணவர்களிடையே மோதல்: காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 3:27:16 PM (IST)

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:53:18 AM (IST)

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:07:51 AM (IST)

VINCENTAug 11, 2025 - 02:48:52 PM | Posted IP 104.2*****