» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியம், பல்லிக்கோட்டை பகுதிகளுக்கு பள்ளமடை சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை” மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3768 முகாம்கள் கிராமப்புறங்களிலுள்ள 6232 முகாம்கள் ஆக மொத்தம் 10,000 முகாம்கள் மூலம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும், நகர் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக இத்திட்டத்தினை சிதம்பரத்தில் துவக்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தில் மூலம் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 55 வார்டுகளுக்கு 38 முகாம்களும், களக்காடு, விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 நகராட்சி பகுதிகளில் 69 வார்டுகளுக்கு 29 முகாம்களும், 17 பேரூராட்சிகளை சார்ந்த 273 வார்டுகளுக்கு 34 முகாம்களும், ஊராட்சி பகுதிகளுக்கு 154 முகாம்களும் என 255 முகாம்கள் 07.10.2025 வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், மருத்துவத்துறையின் மூலம் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்றையதினம் திருநெல்வேலி மண்டலம் வார்டு எண்.23, 24 பகுதிகளுக்கு திருநெல்வேலி லெட்சுமி மஹாலிலும், களக்காடு நகராட்சி வார்டு எண்.14, 15, 16 பகுதிகளுக்கு களக்காடு மகாத்மா காந்தி வீதி, வேலு பெஸ்ட் மஹாலிலும், கோபாலசமுத்திரம் பேரூராட்சி வார்டு எண்.9-15 பகுதிகளுக்கு பிராஞ்சேரியிலுள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்திலும், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் சாட்டுப்பத்து, பிரம்மதேசம், வாகைகுளம் பகுதிகளுக்கு பிரம்மதேசம் சமுதாய நலக்கூடத்திலும், 

மானூர் ஊராட்சி ஒன்றியம் பல்லிக்கோட்டை பகுதிகளுக்கு பள்ளமடை சமுதாய நலக்கூடத்திலும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பகுதிகளுக்கு முத்தூர் இசேவை மையத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம்களில் உடனடியாக தீர்வு காணும் வகையில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல், பெயர் சேர்த்தல், மின்விநியோகம் பெயர் மாற்றம் போன்ற உடனடியாக தீர்வு காணும் மனுக்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே தீர்வு வழங்கப்பட்டு பலர் சேவைகள் பெற்று வருகின்றனர். மேலும், உடனடி தீர்வு காணாத மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, நாளை (21.08.2025) பாளையங்கோட்டை மண்டலம் வார்டு எண்.32 பகுதிகளுக்கு பாளையங்கோட்டை சித்தா மருத்துவமனை அருகிலுள்ள நூற்றாண்டு மஹாலிலும், அம்பாசமுத்திரம் நகராட்சி வார்டு எண்.14, 15 ஆகிய பகுதிகளுக்கு அம்பாசமுத்திரம் செங்குந்தர் திருமண மண்டபத்திலும், களக்காடு ஊராட்சி ஒன்றியம், படலையார்குளம், கீழகருவேலங்கும் ஆகிய பகுதிகளுக்கு படலையார்குளம் சமுதாய நலக்கூடத்திலும், மானூர் ஊராட்சி ஒன்றியம் செழியநல்லூர் பகுதிகளுக்கு தெற்கு செழியநல்லூர் சமுதாய நலக்கூடத்திலும், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் கூடன்குளம் பகுதிகளுக்கு கூடன்குளம் அனு விஜய் மஹாலிலும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம், அரிகேசவநல்லூர் பகுதிகளுக்கு அரிகேசவநல்லூர் முஸ்லிம் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory