» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு காவல்துறை இடையூறு : ஆட்சியரிடம் புகார்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:20:12 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தி வருவதாக பாண்டியபதி பரதவர் நல தலைமை சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான தூய சிந்தாயாத்திரை மாதா ஆலயம் அமைந்துள்ளது. கடலோடி பரதவர்கள், தாங்கள் கடல் வாணிபம் தொடங்குவதற்கு முன்பாக, ஒவ்வொரு முறையும் அன்னையின் ஆலயத்தினை வழிபட்டுச் செல்வது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வந்த நடைமுறையாகும்.
இந்த ஆலயத்தில் பல மதத்தினரும் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த ஆலயம் குருஸ்புரம், புனித சூசையப்பர் ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்துறையும் துறையும் அறிந்த ஒன்றாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள வடபாகம் காவல்துறையால் மிகுந்த நெருக்கடி தரப்படுகிறது.
குறிப்பாக சென்ற முறை ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இல்லமும், வளாகமும் மழை நீரால் சூழ்ந்து இருந்த பொழுது, அந்த வெளியேற்றுவதற்காக ஒரு வாய்க்கால் போல தோண்டி ஆலயத்திற்கு மழை நீரை வருகின்ற பாதையை சிதைத்து விட்டார்கள். ஆலயம் வரும் பாதையை சிதைத்து விட்டதால், மாற்று வழியில்லாமல் பக்தர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானார்கள்.
மேலும் சிறப்பு போலீசார் ஒரு பேருந்தில் வந்து, இந்த ஆலயத்திற்கு வடக்கில் உள்ள திரேஸ்புரம் மக்கள் வரும் பாதையை முற்றிலுமாக உடைமறைங்கள் கொண்டு அடைத்து, மக்களுக்கு மிகுந்த சிரமங்களை உண்டு பண்ணினார்கள். பின்னர் அப்பகுதி பெண்களும், பெரியவர்களும் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து அந்தப் பாதையை காவலர்கள் முன்னிலையே அப்புறப்படுத்தினார்கள்.
தற்போதும் ஆலயத்தில் சில பராமரிப்பு பணிகள் துவங்கிய பொழுது, மீண்டும் வடபாகம் காவல்துறை எங்களிடம் வந்து இப்பணிக்கு இடையூறு செய்கிறார்க்ள. திட்டமிட்டு இருநூறு ஆண்டுகளாக கிறிஸ்தவ மக்களால் ஆராதிக்கப்பட்டும் வந்த இந்த ஆலயத்தை அப்புறப்படுத்த செயல்படுகிறார்களோ என்று எங்களுக்கு ஐயப்பாடு எழுந்துள்ளது. எனவே, இந்த ஆலயத்தை மழை நீர் பாதிக்காதவாறு செய்கின்ற பணிகளுக்கும் தற்போது தடுத்து வைத்துள்ள பணிகளுக்கு எந்த இடையூறும் காவல்துறை செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
IndianAug 11, 2025 - 04:49:48 PM | Posted IP 104.2*****
If it is a Hindu temple or pillaiyar kovil. they would have removed it already.
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயை அடித்துக்கொன்ற வாலிபர்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 2:28:12 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

நெல்லை பல்கலை. மாணவர்களிடையே மோதல்: காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 3:27:16 PM (IST)

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:53:18 AM (IST)

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
புதன் 27, ஆகஸ்ட் 2025 10:07:51 AM (IST)

தக்காளிAug 12, 2025 - 10:31:27 PM | Posted IP 172.7*****