» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு!

சனி 22, நவம்பர் 2025 10:08:40 AM (IST)



இருதயகுளம், அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியை அருள் சகோதரி சூ. அருள்மேரி தலைமை வகித்தார். பள்ளி மாணவிகள் 1600 பேர் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் விதைப் பந்துகள் தயாரித்து சாதனை படைத்தனர். வெங்கடாம்பட்டி சமூக ஆர்வலர் திருமாறன் கலந்து கொண்டு விதைப்பந்துகள் தயாரிப்பதன் அவசியம் குறித்து விளக்கிப்பேசினார். 

ஆசிரிய அருள் சகோதரிகள் ஜோசப் செல்வி, ஜான்சி, பிரசீலா, கிளாரா மேரி, மரிய மல்லிகா, ஜான்சி, ரீட்டா புஷ்பம்,  மற்றும் அருள் ராஜ துரைச்சி ஆகியோர் மாணவிகளுக்கு விதைப்பந்துகளை செய்து காட்டினர். விதைப்பந்து தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை அருள் சகோதரி சூ. அருள் மேரி  மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரிய இனிகோ மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory