» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கனமழையில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் சேதம்: தற்காலிகமாக சீரமைப்பு!

புதன் 26, நவம்பர் 2025 5:02:55 PM (IST)



திருநெல்வேலியில் கனமழையின் காரணமாக சேதமடைந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி டவுணில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப மேல்பகுதியிலுள்ள சுற்றுச்சுவர் பகுதியளவு கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்த சுற்றுச்சுவர் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது.

நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஏராளம். அப்படிப் போராடிய தியாகச் செம்மல்தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக உ.சிதம்பரனார் மணிமண்டப மேல்பகுதியிலுள்ள சுற்றுச்சுவர் பகுதியளவு சேதமடைந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, போர்க்கால அடிப்படையாக அந்த சுற்றுச்சுவர் பகுதியினை பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு மழைக்காலம் முடிவடைந்தவுடன் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory