» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்

புதன் 3, டிசம்பர் 2025 4:34:24 PM (IST)

தென்காசியில் அரசு வழக்கறிஞர் அவரது அலுவலகம் அருகிலேயே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் தென்காசி கூலக்கடை  பஜார் பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். இன்று மதியம் அவரது அலுவலகத்திற்கு அருகில் அவர்  நின்றுகொண்டிருந்தபோது  மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அரசு வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory