» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நிருபர் மீது தாக்குதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:16:09 AM (IST)

தூத்துக்குடியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனியார் நாளிதழில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், எப்சிஐ குடோன் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து பாலசுப்பிரமணியன் அந்த டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரித்தபோது ஊழியர்கள் 5பேர் சேர்ந்து பாலசுப்பிரமணியனை கடுமையாக தாக்கினார்களாம். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் பாலசுப்பிரமணியத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)


podhu janamDec 4, 2025 - 05:13:00 PM | Posted IP 172.7*****