» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

வியாழன் 4, டிசம்பர் 2025 8:36:12 PM (IST)

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2019ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ்(29/25) மற்றும் அவரது தாயார் சுப்புத்தாய் (54/2025), ரமேஷின் தந்தை முருகன் (60/2025), ரமேஷின் சகோதரர் மாரிமுத்து (26/2025) ஆகியோரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வஷீத் குமார் இன்று (04.12.2025) குற்றவாளி ரமேஷ்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 20,000 அபராதம் விதித்தும் சுப்புத்தாய், முருகன், மாரிமுத்து ஆகிய மூவரை விடுதலை செய்தும் மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சம் வழங்க உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பூங்குமார், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து

TutyDec 4, 2025 - 10:54:40 PM | Posted IP 172.7*****

இவன் manakaartchi டிரைவர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory