» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி-சென்னை இடையே பண்டிகை கால கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை!

வெள்ளி 9, ஜனவரி 2026 12:25:18 PM (IST)


தூத்துக்குடி-சென்னை இடையே பண்டிகை கால கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் மா. பிரமநாயகம் அனுப்பியுள்ள மனுவில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி- சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி மற்றும் மைசூர்-தூத்துக்குடி, தூத்துக்குடி- மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கியமைக்கு மனமார்ந்த நன்றியை தங்கள் நிர்வாகத்திற்கு கொள்கிறோம்.

ஆனால், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு 19-01-2026ம் தேதி சென்னை சென்ட்ரல்- தூத்துக்குடி 20-01-2026ம் தேதி தூத்துக்குடி-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனால் 17, 18, 19 ஆகிய நாட்களில் முத்துநகர் ரயில் அதிகமாக காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. மேற்படி நாட்களில் முத்துநகர் ரயிலில் தூத்துக்குடி-சென்னை இடையே அதிகமாக பயணிகள் வருவார்கள் என்று உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம். 

ஆதலால், மேற்காணும் நாட்களில் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் சென்னை-தூத்துக்குடி, தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதலாக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுகிறோம். இல்லையென்றால், தூத்துக்குடி - சென்னை இடையே சாதாரண பொதுப் பெட்டிகள் ரயில்கள் இயக்க வேண்டுகிறோம். குறிப்பாக தூத்துக்குடி - சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

ஆம்Jan 9, 2026 - 09:48:30 PM | Posted IP 104.2*****

அடிக்கடி நம்ம பணத்தில் விமானத்தில் சுற்றும் கண்ணுமுழிக்கு ஒன்னும் தெரியாது, மக்கள் படும் கஷ்டம் எல்லாம் தெரியாது

JohnJan 9, 2026 - 06:25:29 PM | Posted IP 162.1*****

மேட்டுப்பாளையம் வண்டியின் பெட்டிகள் திங்கள் காலை 4 மணி முதல் வியாழன் மாலை 11 வரை தூத்துக்குடியில் நிறுத்தப் படுகின்றன. நிறந்தரமாகவே வாரம் ஒரு நடை சென்னைக்கு போய் வரலாமே

ஓட்டு போட்ட முட்டாள்Jan 9, 2026 - 12:43:36 PM | Posted IP 172.7*****

ஒரு நாளைக்கு 2 ரயில்கள் விட சொன்னா விமானம் விடுது அந்த கண்ணு முழி .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory