» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூர் கோயில் உண்டியல் மூலம் ரூ.3.39 கோடி வருவாய் : 724 கிராம்தங்கமும் கிடைத்தது

சனி 10, ஜனவரி 2026 8:07:30 AM (IST)

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.39 கோடி, மற்றும் 724 கிராம் தங்கம் கிடைத்தது.

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது. இணை ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், நாகவேல், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 39 லட்சத்து 56 ஆயிரத்து 353 ரூபாயும் (ரூ. 3,39,56,353), தங்கம் 724 கிராம், வெள்ளி 26 கிலோ 340 கிராம், பித்தளை 123 கிலோ 760 கிராம், செம்பு 12.48 கிலோ மற்றும் வெளிநாட்டு பணம் 1408-ம், வெள்ளி காசு மாலை, சுமார் ஒரு அடி உயரம் கொண்ட தங்க வேல் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி, கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து

லெனின்Jan 11, 2026 - 10:07:04 AM | Posted IP 162.1*****

தலையங்கத்தில் 724 கிலோ என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory