» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி–சென்னை கூடுதல் இரவு ரயில் இயக்க வேண்டும் : பாரதிய ஜனதா கோரிக்கை !!
சனி 10, ஜனவரி 2026 4:24:42 PM (IST)
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் இரவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன் அனுப்பியுள்ள கடிதத்தில் "தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது 12693/12694 முத்துநகர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் உடனடியாக நிரம்பி விடுவதால் முன்பதிவு செய்து பயணிக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி–சென்னை லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாகவும், அதிகரித்து வரும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டும், 22623/22624 மதுரை–தாம்பரம் மகால் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து தினசரி இயக்கம் வழங்க வேண்டும்.
இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டால், சென்னைக்கு அதிகாலை நேரத்தில் சென்றடையவும், இரவு நேரத்தில் புறப்படவும் வசதி கிடைக்கும் என்றும், தஞ்சாவூர்–கும்பகோணம் வழியாக பிரதான ரயில் பாதைக்கு தினசரி இணைப்பு கிடைக்கும். எனவே, தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மகால் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், ட்யூப் எரிக்க கூடாது: ஆட்சியர் சுகுமார் வேண்டுகோள்
சனி 10, ஜனவரி 2026 5:20:20 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது
சனி 10, ஜனவரி 2026 12:52:16 PM (IST)

திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)


PremkumarJan 11, 2026 - 08:34:08 PM | Posted IP 162.1*****