» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பத்திரிகை தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

சனி 10, ஜனவரி 2026 5:47:22 PM (IST)


தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா குருஸ் பர்னாந்து சிலை அருகில் சிலை அருகில் நடைபெற்றது. 

விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு,  மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில்  மாதா மதுவிலக்கு சபை செயலாளர் அருட்தந்தை ஜெயந்தன், சிவன் கோவில் பிரதான அர்ச்சகர் செல்வம் பட்டர், ஜாமியா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி மீராசா ஆகியோர் பங்கேற்றனர். 

விழாவிற்கு மாவட்ட பத்திரிகை தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் முத்துமாரியம்மன், தின உதயம் மாவட்ட செய்தியாளர் கார்த்திக், முத்து செய்தி, சத்யா, சாய்பாபா, காலை தகவல் தினசரி நாளிதழ் மாவட்ட புகைப்பட கலைஞர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

மக்கள்Jan 11, 2026 - 08:58:01 PM | Posted IP 104.2*****

ஹீ ஹீ ஹீ

ஜாண் முகம்மது முருகாJan 10, 2026 - 06:55:32 PM | Posted IP 104.2*****

காலக்கொடுமையடா முருகா இதில் பாதிபேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory