» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சனி 21, மார்ச் 2026 4:39:16 PM (IST)

சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் நரேந்திர ஏசரி இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நரேந்திர ஏசரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் செலவினக் கண்காணிப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, திருநெல்வேலி கோட்டாட்சியர் பிரியா மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து, தேர்தல் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யச் திருநெல்வேலி - சேரன்மகாதேவி சாலையில் சுத்தமல்லி பகுதியில் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனையைப் பார்வையிட்டார். புதுப்பேட்டை சோதனைச் சாவடியில் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் ஆவணப் பதிவுகள் குறித்து ஆய்வு செய்தார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைச் சரியாகக் கண்காணிக்கவும் குழுவினருக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)


