» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் ஆனந்த் மோகன் பங்கேற்பு!

திங்கள் 1, ஜூன் 2026 3:21:18 PM (IST)



திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை இன்று நேரில் சென்று பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம் பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுவினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை விரைந்து எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை , சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory