» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)
நெல்லை அருகே பத்தமடையில் நிலப்பிரச்சினை காரணமாகக் காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி ஒருவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்துள்ளார். பலத்த தீக்காயமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள பத்தமடை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42). தச்சுத் தொழிலாளியான இவருக்கும், இவருடைய அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வழிபாதை நிலம் தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நிலப்பிரச்சினை காரணமாகக் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த சீனிவாசன், நேற்று காலையில் பத்தமடை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். காவல் நிலையத்தின் முன்புறம் வந்த அவர், திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்துத் தன் உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
தீப்பற்றி உடல் எறிந்த நிலையில் அலறியபடி அவர் காவல் நிலையத்திற்குள் ஓடியுள்ளார். அங்கிருந்த போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துக் காப்பாற்றினர். இச்சம்பவத்தில் பலத்த தீக்காயமடைந்த சீனிவாசனை மீட்ட போலீசார், உடனடியாகச் சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துப் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலப்பிரச்சினை மற்றும் தற்கொலை முயற்சி குறித் துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)


