» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!

புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)

StartupTNellai.jpg

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று திருநெல்வேலியில் நடந்த புதுமை சங்கமம் தொழில்முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், StartupTN திருநெல்வேலி மண்டல மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் Tirunelveli Region JCI Alumni Club, சார்பில் "புதுமை சங்கமம் – மாவட்ட ஆட்சியருடன் தொழில்முனைவோர் கலந்துரையாடல்" நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, *"புதுமை சங்கமம்"* நிகழ்வானது அரசு – ஸ்டார்ட்அப்கள் – தொழில் நிறுவனங்கள் – மாணவர்கள் – புதுமையாளர்கள் ஆகியோருடன் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள், வணிக இணைப்புகள் மற்றும் புதுமை சார்ந்த தீர்வுகளை உருவாக்கும் நிகழ்வாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் *70-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கல்வித்துறை, உற்பத்தித்துறை, தொழில்துறை, வாகன உற்பத்தி, உணவு மற்றும் சிறுத்தானியம், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகள் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது புதுமையான தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, விளக்கமளித்தனர்.

ஒவ்வொரு தொழில்முனைவோரின் தொழில் முயற்சிகள், சந்திக்கும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்கள். அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, தயாரிப்புகளின் தரத்தை மேலும் மேம்படுத்துதல், சந்தைப்படுத்தல் மற்றும் வணிக விரிவாக்கம், அரசு துறைகளின் ஆதரவு பெறும் வழிமுறைகள், தொழில் வளர்ச்சிக்கான திட்ட அறிக்கைகள் தயாரித்தல், முதலீடு மற்றும் வணிக இணைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் விரிவான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்கள்.

நிகழ்வில் பட்டுப்புல் (Silk Cotton) மூலம் தயாரிக்கப்பட்ட சோப்பு, இயற்கை மூலிகை அழகுசாதனப் பொருட்கள், முழுமையாக ஆர்கானிக் உணவுப் பொருட்கள், GPS அடிப்படையிலான பேருந்து கண்காணிப்பு (Bus Tracking) தீர்வு, மாணவர்களின் தொழில்நுட்ப புதுமைகள், பல்வேறு ஸ்டார்ட்அப் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும், இக்கூட்டத்தில் ABOSS TECHNOLOGIES என்ற நிறுவனம் அறிமுகப்படுத்திய "Alpha Voice" என்ற AI தொழில்நுட்ப அடிப்படையிலான புதுமையான மொபைல் ஒலி அமைப்பு (AI Phone Mic Solution) பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் குறைந்த செலவில் பெரிய கூட்டங்களை நிர்வகிக்க முடியும், தனிப்பட்ட மைக் தேவையை குறைக்க முடியும், நிகழ்ச்சிகளில் எளிதாக ஒலிப்பரப்ப முடியும், AI மூலம் உரைகளை தானாக சுருக்கி வழங்க முடியும். இந்த *"Alpha Voice" AI Phone Mic* தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

StartupTN மூலம் தொழில்முனைவோருக்கு தேவையான அரசு துறை இணைப்புகள், வணிக வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும். தொழில்முனைவோர் தங்களது தேவைகளை திட்ட அறிக்கைகளாக வழங்கினால், முறையாக ஆய்வு செய்து முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.

தொடர்ந்து திருநெல்வேலி ஸ்டார்ட்அப் சூழல் வளர்ச்சி, மாணவர்களிடம் தொழில்முனைவு மனப்பான்மையை உருவாக்குதல், ஏற்றுமதி வாய்ப்புகள், தொழில்முனைவோருக்கான நெட்வொர்க்கிங் மற்றும் மாவட்ட சவால்களை ஸ்டார்ட்அப் வாய்ப்புகளாக மாற்றுவது உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு துறை வல்லுநர்கள் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, (StartupTN) மு.நாகதிலகம், ஸ்டார்ட்அப்கள் – தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், புதுமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory