» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம்: சீமான் குற்றச்சாட்டு!
சனி 10, ஆகஸ்ட் 2024 4:03:23 PM (IST)
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம் என்று சீமான் விமர்சித்துள்ளார்..
உலக பழங்குடியினர் தினத்தை ஒட்டி, தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம். தமிழ்ப்புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா? திராவிட கட்சிகள் காசே இல்லாமல் கூட்டத்தை கூட்டினால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் அல்ல என்றும் திமுக தான் பாஜகவின் மெயின் டீம் என்றார்.