» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!

புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

குமரியில், படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தை சேர்ந்த அஜேஸ் மற்றும் அர்ஷத்அலி ஆகிய இருவரும் ஓட்டல் மானேஜ்மெண்ட் படிப்பை முடித்த நிலையில், இன்று அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று சான்றிதழை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வெள்ளமோடி பகுதி அருகே வந்தபோது, இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களுக்கு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory