» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகை-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை: முன்பதிவு தொடங்கியது!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 11:37:53 AM (IST)



நாகையில் இருந்து இலங்கைக்கு வருகிற 16-ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் சில நாட்களில் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இது இரு நாட்டு பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் கடந்த 6-ஆம் தேதி நாகை துறைமுகம் வந்தது. இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடந்தது.

இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 16-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதில் பயணம் செய்ய விரும்புபவர்கள் www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory