» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

செவ்வாய் 1, அக்டோபர் 2024 5:26:01 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும், 2 நாள்களில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

"சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில்(ஆர்டா) ரத்தக் கசிவு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி, ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நல்ல முறையில் முடிக்கப்பட்டதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாள்களில் வீடு திரும்புவார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

காசுOct 3, 2024 - 03:05:03 PM | Posted IP 172.7*****

காசு இருந்தால் அம்பானி வீட்டுக்கு போய் ஆடுவார் அந்த கூத்தாடி

சங்கர்Oct 2, 2024 - 06:33:40 AM | Posted IP 172.7*****

இவனால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பிரோஜனம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory