» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்

வெள்ளி 4, அக்டோபர் 2024 5:14:34 PM (IST)

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அக்.8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி II  & IIA முதல் நிலைத் தேர்வானது  14.09.2024  அன்று நடைபெற்றது. இதில் தொகுதி II  விற்கு 507 பணிக் காலியிடங்களும் தொகுதி II-A பிரிவிற்கு 1820   பணிக் காலியிடங்களும் என மொத்தம் 2327 பணிக்காலியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில்  டி.என்.பி.எஸ்.சி. தொகுதி II & IIA  முதன்மைத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு 08.10.2024  செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள்  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து 18.10.2024 தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், SMART BOARD வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் (Study Material) இலவசமாக வழங்கப்படும். இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு  மாதிரித்தேர்வுகள்  நடைபெறவுள்ளது.  

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு  பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory